புதுக்குடியிருப்பு நேற்றைய தாக்குதலில் 100 படையினர் பலி

y183826943563643புதுக்குடியிருப்பை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முற்றுகை ஒன்று விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.இதன்போது சிறிலங்காப் படையினருக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக படையினரின் உடலங்களும், ஆயுதங்களும் களமுனை எங்கும் சிதறிக் கிடப்பதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முயற்சியை முறியடித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் உடலங்கள் பெருமளவில் தாம் கைப்பற்றியிருப்பதாகவும் படைதரப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, புலிகளின் குரலில் இம்மாத ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பை கைப்பற்ற முனைந்த படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் நான்கு நாள் தாக்குதலில் மட்டும் 450 வரையான படையினர் கொல்லப்பட்டதாகவும் 1000 படையினருக்கு மேல் காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை தாக்குதலில் மட்டும் 100ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டு, 450 வரையான படையினர் படுகாயங்களுக்கு உள்ளானதாகவும் புலிகளின் குரல் தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.