வன்னியில் காற்றுடன் கூடிய மழை: இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் காயமடைந்தோர் பாதிப்பு

flooded_outவன்னியில் பெய்து வரும் மழை காரணமாக இடம்பெயர்ந்து வரும் மக்கள் பெரும் பாதிப்புக்குள் உள்ளாகியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கம் பெருங்காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவித்துள்ளன.

காற்றுடன் கூடிய மழை காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்கள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மழையில் நனையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் படையினரின் தாக்குதலில் காயமடைந்த மக்களும் பெரும் பாதிப்புக்குள் உள்ளாகியுள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.