கோதபாயவின் விலாங்கு மீன் புத்தி :இந்தியாவுக்கு தலை சீனாவுக்கு வால் பாக்கிஷ்தானுக்கு வயிறு

ltte_atrocities_20061201_gotabhaya_rajapaksa_09சிறிலங்காவிற்கு மிகப் பெருமளவில் ஆயுதங்களை வழங்கும் நாடுகளில் ஒன்றான சீனாவிற்கு ஒரு வார கால பயணத்தை மேற்கொண்டு திரும்பியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபாய ராஜபக்ச.

கடந்த 28ம் திகதி சீனா சென்றிருந்த கோத்தபாய ராஜபக்ச, 6ம் திகதி வரை சீனாவில் தங்கியிருந்து ஆயுதக் கொள்வனவுகளில் ஈடுபட்டுள்ளதுடன், ஆலோசனைகளையும் பெற்றுத் திரும்பியுள்ளார்.
இதன்போது சீனா இராணுவ உயர்மட்டத் தலைவர்களை சந்தித்துப் பேசிய கோத்தபாய ராஜபக்ச, வன்னிக் களமுனையின் தற்போதையை வெற்றி நிலை குறித்தும் வரை படங்களுடன் எடுத்து விளக்கியதாக தெரியவருகின்றது.சிறிலங்காவிற்கு இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் இராணுவ உதவிகளை வழங்கி வருவது தெரிந்ததே.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.