மாத்தறையில் பாரிய குண்டுவெடிப்பு: 2 அமைச்சர்கள் படுகாயம்; 10 பேர் பலி

சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள மாத்தறையில் இன்று காலை பாரிய குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முக்கிய அமைச்சர்கள் இருவர் படுகாயமடைந்திருக்கும் அதேவேளையில் சுமார் பத்துப் பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மாத்தறை அக்குரசப் பகுதியில் இம்முறை மீலாதுன் நபிகள் விழா நடைபெற்ற பகுதியிலேயே இன்று செவ்வாய்க்கிழமை காலை குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது. பெருந்தொகையான முஸ்லிம்களும் அமைச்சர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் பல முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம் அமைச்சர்களான பெளசி, அமீர் அலி ஆகியோர் கலந்து கொண்ட போதிலும் அவர்கள் காயமடையவில்லை. அமைச்சர் மகிந்த விஜயசேகர படுகாயமடைந்துள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.