16வது வருடமாக சுவிசில் நடாத்தப்படும் வருடாந்தப் பொதுப்பரீட்சை
-
இவ் விடயம் 08. 05. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 21:16க்கு பதிவு செய்யப்பட்டது
- புகைப்படங்கள், புலத்தமிழர் செய்திகள்
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட பரீட்சை விதிமுறைமைக்கு அமைவாக 16வது வருடமாக சுவிசில் நடாத்தப்படும் வருடாந்தப் பொதுப்பரீட்சை இன்று 08.05.2010 சனிக்கிழமை 48 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.
ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 10 வரை தாய்மொழியுடன் தெரிவுப் பாடங்களான சைவசமயம் றோமன் கத்தோலிக்கம் போன்ற பாடங்களுடன் நடைபெற்ற இப்பரீட்சைக்கு 4704 மாணவர்கள் தோற்றியிருந்தார்கள்.
பல வருடங்களாக கல்விச்சேவையில் பணியாற்றும் தமிழ் வித்தியாலயங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் ஆசிரியர்கள் ஆண்டு 10 தாய்மொழிப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களென 450 இற்கும் மேற்பட்ட கல்விச்சேவைச் செயற்பாட்டாளர்கள் மேற்பார்வையாளர்களாக சேவையாற்றியிருந்தார்கள்.
இப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படுவதுடன் இப் புள்ளிகள் சுவிஸ் பாடசாலைகளுக்கும் வழங்கப்படுமென தமிழ்க் கல்விச்சேவையின் பரீட்சைக்குழு அறிவித்துள்ளதுடன் பரீட்சை சிறப்புற நடைபெற ஒத்துளைப்பு நல்கிய அனைவருக்கும் தமிழ்க்கல்விச்சேவை தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
நன்றி.
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து





