கனடிய நாடாளுமன்றில் இடம்பெற்ற தமிழ்மக்களின் மே மாத நினைவு தினம்!
-
இவ் விடயம் 13. 05. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 19:58க்கு பதிவு செய்யப்பட்டது
- புகைப்படங்கள், புலத்தமிழர் செய்திகள்
தமிழர் தாயகத்தில் கடந்த மே மாதம் சிறிலங்கா அரசினால் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரிய மனித பேரலத்தை நினைவு கூரும் ஓராண்டு நினைவு தினம் கடந்த 11 ஆம் திகதி கனடிய தமிழர் பேரவையினால் கனடிய நாடாளுமன்ற கட்டடத்தில் அனுட்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் 30 க்கும் மேற்பட்ட கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் இந்த துக்க தினத்தினை அடையாளப்படுத்தும் வண்ணம் சிவப்பு நாடா அணிந்திருந்தனர். நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நினைவு உருவப்படத்துக்கு அனைவரும் மலர் வணக்கம் செலுத்த, உயரிழந்த தமிழ் உறவுகளுக்காக கிறிஸ்தவ மதகுரு பிரார்த்தனை வழிபாட்டை நடத்தினார்.
இந்த நினைவு நிகழ்வில் பேசிய கனடிய தமிழர் பேரவை உறுப்பினர் – கடந்த வருடம் மே மாதம் தமிழர் தாயகத்தில் மிகப்பெரிய மனித பேரவலத்தை நடத்தி முடித்த சிறிலங்கா அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை நடத்துவதற்கான ஐ.நா. குழுவினை நியமிக்கும்படி விரைவில் கனடாவுக்கு வருகை தரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை கனடிய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


