ஜோ்மனி, போ்லினில் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரழிப்பின் முதலாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு
-
இவ் விடயம் 15. 05. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 4:26க்கு பதிவு செய்யப்பட்டது
- புகைப்படங்கள், புலத்தமிழர் செய்திகள்
முள்ளிவாய்க்கால் மனிதப் பேரழிப்பின் முதலாம் ஆண்டு நினைவுச் சுமந்து யேர்மனி பேர்லின் மாநகரில் நடைபெறும் பல நினைவு நிகழ்வுகளின் ஓரங்கமாக இன்று பேர்லின் பெருமை வாய்ந்த தேவாலயத்தின் வளாகத்தில் பேர்லின் வாழ் மக்களால் அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் அனைத்து மக்களால் மிகவும் உணர்வு ரீதியாக தீபம் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து இளையோர்களால் இலங்கையில் தற்காலிகமாக மக்கள் படும் அவலத்தையும் அடுத்து போர் முடிந்து ஒரு வருடம் ஆகியும் இன்று வரை இலங்கை இனவெறி அரசால் எந்த ஒரு அரசியல் தீர்வும் முன்வைக்கப்படவில்லை என்ற அறிக்கைகளும் இளையோர்களால் வாசிக்கப்பட்டன.
இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த இராணுவத்தளபதி Jegath Dias ஐ உடனடியாக யேர்மனியிலிருந்து வெளியேற்றுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்பு Bremen ஊடாக முன்வைக்கப்பட்ட மனுவும் வாசிக்கப்பட்டது.
இறுதியில் உயிரோடு துடித்த எம் உறவுகளோடு மண் அள்ளிப்போட்டாலும்… அவர் உடல்களை எரித்து கடலிலே கரைத்தாலும்… எஞ்சியபேரையும் முட்கம்பி வேலிக்குள் முடக்கி போட்டாலும் விடுதலை காணும் எம் வேகம் குன்றாது… ஈழம் காணும் எம் தாகம் தீராது எனும் உறுதியோடு இந் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
தொடர்ச்சியாக வலிசுமந்த நாட்களில் நீங்காத நினைவுகளுக்காய் பேர்லின் உறவுகளின் நெடுமூச்சு நிகழ்வுகளில் அனைத்து பேர்லின் வாழ் தமிழ் மக்களும் உணர்வால் ஒன்றிணைந்து ஒரு கணம் சிரம் தாழ்த்தி நினைவுகூர வாரீர்.
சிறப்பாக எதிர்வரும் மே 18ஆம் திகதியன்று பேர்லினில் இலங்கை தூதரகத்தின் முன்னால் சர்வதேச மனித உரிமை அமைப்பாகிய Amnesty International உடன் இணைந்து கணடன கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறும் என்பதை அறிவித்துக்கொள்ளுகிறோம்.
அனைவரையும் துணிவோடு கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.







