வலி சுமந்த நாட்களுடன் ஆறாத ரணகளமாய் மீண்டு வருகின்றது ஈழம் நலிந்த சிவந்த மே! : சுவிஸில் நாளை அஞ்சலி
-
இவ் விடயம் 15. 05. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 4:31க்கு பதிவு செய்யப்பட்டது
- புகைப்படங்கள், புலத்தமிழர் செய்திகள்
வலி சுமந்த நாட்களுடன் ஆறாத ரணகளமாய் மீண்டு வருகின்ற ஈழம் நலிந்த சிவந்த மே மாதத்தில் மடிந்த மக்களையும் மாவீரர்களையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காய் இம்மாதம் 15 ம் நாள் சனி பிற்பகல் மூன்று மணிக்கு சூரிச் ஹெல்வெற்றியா பிளட்ஸ் இல் ஓன்று கூடுவோம்.
கடந்த ஆண்டு இதே மாதம் சிவந்தது தமிழ் ஈழம். இருண்டதோ தமிழர் வாழ்வு. ஐனநாயகமும் மனிதநேயமும் பேசிய அனைவரும் தமது கண்களை மூடி 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் மனிதப்பேரவலத்தை வேடிக்கை பார்த்தனர். உலகின் மூலைகள் எங்கும் நாம் நிறுத்துங்கள் விரைந்து செயற்படுங்கள் எமது உறவுகளைக் காப்பாற்றுங்கள் என்று உலகத்தின் செவிப்பறைகள் அதிர கத்தினோம் கதறினோம். எவரும் முன்வரவில்லை எவரும் நீதி வழங்கவில்லை.
அந்த இருள் சூழ்ந்த நாட்களில் மடிந்த மக்களையும் மாவீரர்களையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதட்காய் இம்மாதம் 15 ம் நாள் சனி பிற்பகல் மூன்று மணிக்கு சூரிச் ஹெல்வெத்தியா பிளட்ஸ் இல் ஓன்று கூடுவோம்.
எமது கைகளில் உள்ள அடிமை விலங்குகளைத் தவிர இழப்பதற்கு எம்மிடம் ஒன்றுமில்லை. எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான தீர்வை நாமே தேடுவோம். முள்ளிவாய்க்காலிலிருந்து விடுதலைக்கான அடுத்தகட்டக் கோலை புலம்பெயர்வாழ் மக்களாகிய எம்மிடமே வரலாறு விட்டுள்ளது.
உலகெங்கும் வேர்விட்டு வாழும் நாம் ஒன்றுபடுவோம். எம்மிடம் இன்று இருக்கும் அசைக்கமுடியாத மனோபலத்துடன் ஒருமித்த சக்தியாய் சர்வதேசத்தின் ஆதரவுடன் எமது சுதந்திர விடுதலையை வென்றெடுப்பதற்கான அடித்தளத்தை நிறுவுவோம். ஐனநாயக இராஐதந்திர வழிகளை இறுகச்செப்பனிட்டு முள்ளிவாய்க்கால் நினைவுகளோடு தாயகத்திலும் புலத்திலும் தமிழன் தலைதூக்கும் நாள் வெகு தூரத்திலில்லை.
ஆகவே அனைத்து சுவிஸ்வாழ் தழிழ் தேசிய உறவுகளையும் உரிமையுடன் அழைக்கிறார்கள்,
சுவிஸ் ஈழத்தமிழரவையினர்.



