கனடிய தமிழ் இளையோர் முன்னெடுத்த 24 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு போராட்டம்
-
இவ் விடயம் 17. 05. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 3:47க்கு பதிவு செய்யப்பட்டது
- புகைப்படங்கள், புலத்தமிழர் செய்திகள்
கடந்த ஆண்டு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பாரிய இனப்படுகொலையை ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்கள் மீது நிகழ்த்தியிருந்தது மே மாதத்தைவலிசுமந்த மதமாக அறிவித்து கனடியத் தமிழ் இளையவர்கள் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துளார்கள்.
அதில் ஓர் அங்கமாகபல்கலைகழக மாணவர்களால் அவ் இனப்படுகொலையை செய்த அரசாங்தை சர்வதேச நீதிமன்றில் குற்றவியல் விசாரணைகளை சர்வதேசம் மேற்கொள்ளவேண்டும் என்றும் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூறும் முக்கமாகவும் கனடியத் தமிழ் இளையவர்கள் 24 மணிநேர உண்ணாநிலை மேற்கொண்டார்கள். மறுநாள் மாலை தமது உண்ணாநிலையை முடித்துகொன்டர்கள்.
அமெரிக்க துணைத்த்தூதுவரலயம் முன்பாக கூடிய இளையவர்கள் எமதுமக்களின் துயரங்களை சர்வ்தேதுக்கு எடுத்துகாடும் முகமாவும் ஸ்ரீலங்காஅரசாங்கத்தை போர் குற்றவியல் விசாரணைகளை சர்வதேசம் மேற்கொள்ளவேண்டும் என்றும் பதாதைகளை தாங்கியவாறு நின்றனர் .
இதன்படி ரொறொண்டோ வில் உள்ள அமெரிக்க துனைத்தூதுவரலயம் முன்பாக கூடிய மக்கள் தமது கவனயீர்ப்பு நிகழ்வை தமது வாயில் கறுப்பு துணியால்கட்டியவாறு பங்குகொண்டனர் இவ் கவனயீர்ப்பு நிகழ்வு நாள்தோறும் மே 19 வரை தொடந்து நடைபெறவுள்ளது எனபது குறிப்படத்தக்கது.



