பிள்ளையானின் சில கோரிக்கைகள் புலிகளது கோரிக்கைகளுக்கு நிகரானது: கருணா

pi_karunaகிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானினால் மத்திய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள சில கோரிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின்
கோரிக்கைகளுக்கு நிகரானதென அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கடந்த வாரம் தம்மிடமிருந்த ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருப்பதைக் கொண்டு அவர்களிடம் வேறு ஆயுதங்கள் இல்லையென்ற முடிவுக்கு வரவும் முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுத ஒப்படைப்பின் போது கைத்துப்பாக்கிகள் எதனையும் பிள்ளையான் தரப்பு ஒப்படைக்கவில்லை எனவும், கைத் துப்பாக்கிகளைக் கொண்டே கப்பம் கோரல்
மட்டும் கடத்தல் சம்பவங்களை பிள்ளையான் குழு கிழக்கில் அரங்கேற்றி வருவதாக கருணா குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிள்ளையான் தரப்பில் வெறும் நான்கு பேர் மட்டுமே எஞ்சப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் குழுவினரைப் போன்று தம்மிடம் எவ்வித ஆயுதங்களும் இல்லை எனவும், இதனால் ஆயுதக் களைவு குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அது பிரச்சினையை உருவாக்கும் எனவும், இதனால் சிங்கள சமூகத்துடன் பிணக்கு ஏற்படக்கூடும் எனவும் கருணா தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.