யுத்தப் பிரதேசங்களில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்: அனைத்துலக மன்னிப்புச் சபை

amnestyinternationalயுத்தம் இடம்பெற்றும் பிரதேசங்களில் சுதந்திரமான முறையில் செய்திகளை சேகரிக்க ஊடகங்களுக்கு பூரண அனுமதி அளிக்கப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய கள நிலவரங்கள் பற்றிய உண்மைத் தன்மைகளை அறிந்து கொள்வதில் சிக்கல்கள் காணப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்த நிலைமைகள் குறித்து அறிந்து கொள்வதும், தகவல்களையும் வெளியிடுவதும் ஜனநாயகத்தின் முக்கிய பண்புகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மறைமுகமாக கட்டவிழ்த்து விடப்படும் சகல அடக்குமுறைகளும் கண்டிக்கப்பட வேண்டியதென அனைத்துலக மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.