35 பாரவூர்தி உணவில் 13 பாரவூர்திகள் மாயம் – 22 மட்டுமே யாழ் களஞ்சியத்தில்

e0aeaae0aebee0aeb0e0aeb5e0af82e0aeb0e0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0af8dசிறீலங்கா அரசின் பெரும் எடுப்பிலான பரப்புரையுடன் யாழ் குடாநாட்டுக்கு தரைவழிப்பாதையூடாக அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பாரவூர்திகளில் 13 பாரவூர்திகளில் கொண்டு செல்லப்பட்ட உணவுகள் எங்கு சென்றது என தெரியவில்லை என யாழ் நாவற்குழி களஞ்சிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக யாழ் மாவட்டத்துக்கு 35 பாரவூர்திகளில் உணவு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், அவற்றினை களஞ்சியப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தாம் பணிக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் வெறும் 22 பாரவூர்திகள் மட்டுமே களஞ்சியம் வந்துள்ளதாகவும், ஏனையவை வரவில்லை எனவும் அவை எங்கு சென்றன என தெரியவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்கா படையினருக்குரிய படையக்கருவிகள் மக்களுக்கான உணவு தொடரணியுடன் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும், விடுதலைப்புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் பொருட்டு சிறீலங்கா படையினர் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

உணவுப் பொருள்கள் அடங்கிய பாரவூர்திகள் தென்மராட்சியைச் சென்றடைய முன்னர், படையினரை ஏற்றிய 25 பேரூந்துகள் பாரவூர்திகள் தென் பகுதியில் இருந்து அங்கு வந்து சேர்ந்து விட்டதாகப் பதிவின் யாழ் செய்தியாளர் நேற்று கூறியிருந்தார்.

பேரூந்தில் பயணித்த படையினரை இலக்கு வைத்து ஏ-9 நெடுஞ்சாலையிலுள்ள கிளாலி, முகமாலை, பளைப் பிரதேசங்களை நோக்கி விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.