சிறிலங்காவுக்கான பயணத்துக்காக காத்திருக்கின்றேன்: ஐ.நா. பிரதிநிதி

alstonphilip-5f066சிறிலங்காவுக்கு பயணம் செய்யும் பொருட்டு அந்நாட்டின் அனுமதிக்காக காத்திருப்பதாக நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி பிலிப் அல்ஸ்ரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நிலமை தொடர்பாக ஆராய்வற்கான பேச்சுக்களை தொடங்குவதே இந்த பயணத்தின் நோக்கம். நான் சிறிலங்காவுக்கு பயணம் செய்ய வேண்டிய முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே தெளிவாக சிறிலங்கா அரசுக்கு தெரிவித்து விட்டேன். தற்போது பந்து அரசின் கையில் உள்ளது.

சிறிலங்காவுக்கான பயணத்திற்கு நான் தயாராக உள்ளேன். அவர்கள் விரும்பினால் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான அழைப்பிதழை அனுப்பலாம்.

வடக்கு மற்றும் கிழக்கில் மனிதாபிமான நெருக்கடிகள் மோசமடைந்து வருகின்றன. மோதல்களினால் துன்பத்தை அனுபவித்து வரும் மக்களின் நலன்களை சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் மதித்து பேணுவது முக்கியமானது என்றார் அவர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.