இலங்கையில் நல்லாட்சி ஏற்படுத்த கனேடிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும்: கிறிஸ் பொப்

flag_canada002இலங்கையில் நல்லாட்சியை நிறுவுவதற்கு கனேடிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென பொதுநலவாய ஊடகவியலாளர் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் கிறிஸ் பொப் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உதவி வழங்கும் முதன்மை நாடுகளில் ஒன்றான கனடா, நல்லாட்சியை நிறுவுவது குறித்து அழுத்தம் கொடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களின் குரல்கள் நசுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பீதியற்ற வகையிலான ஊடக சுதந்திரத்தின் மூலம் ஓர் நாட்டின் ஜனநாயக நிலைமைகளை அறிந்து கொள்ள முடியும் எனவும், இலங்கையில் இந்த நிலைமை தலைகீழாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலைச் சம்பவங்கள், கடத்தல்கள் காணாமல் போதல்கள் போன்ற பல்வேறு ஜனநாயக விரோதச் செயல்கள் இலங்கையில் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்த இலங்கை அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.