07.06.2010: அமெரிக்காவில் புலம்பெயர் இளைஞர்கள் மாநாடு – 2010

அமைதிக்கான அமெரிக்க நிறுவனம் நடத்தும் புலம்பெயர் இளைஞர்கள் மாநாடு – 2010 எதிர்வரும் 07-06-2010 அமெரிக்க தலைநகரான வோசிங்டனில் இடம்பெறுகின்றது.

இதில் உகண்டாவை சேர்ந்த கிரேஸ் அகல்லோ [Grace Akallo] கலந்து சிறப்புரை ஆற்றுகிறார். உகண்டாவில் சிறார் போராளியாக இணைக்கப்பட்டிருந்த கிரேஸ் அகல்லோ தற்போது அமைதிக்கான பரப்புரையாளராக உள்ளார்.

இளைய புலம்பெயர் சமுதாயத்தினர் தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவும், அமைதியை உருவாக்குவதில் தங்களை எப்படி ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்பதை கற்றுக் கொள்ளவும் இந்த மாநாடு ஒரு வாய்ப்பாக அமையும் என இந்த மாநாட்டை ஒழுங்கு படுத்தும் அமைதிக்கான அமெரிக்க நிறுவனம் [U.S. Institute of Peace-USIP] தெரிவித்துள்ளது.

‘புதினப்பலகை’க்கு கிடை்கப்பெற்ற இத்தகவலை தமிழ் இளையோர்கள் அறிவதற்காக இங்கு தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம். புதினப்பலகைக்காக தமிழாக்கம் செய்தவர் கி.வேணி.

அவர்களின் அழைப்பிதழின் விபரமாவது:

பல கலாச்சாரங்களையும் உள்ளடக்கிய நாடு அமெரிக்கா. நாளுக்கு நாள் பலவேறு நாடுகளை சேர்ந்த அதிகப்படியான மக்கள் அங்கு குடியேறி வருகின்றனர்.

இவ்வாறு புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் பல கலாச்சர்ரங்களை சேர்ந்த மக்களும் தங்கள் சொந்த நாட்டுடனும் திடமான ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால் இவர்களின் அமெரிக்க கலாச்சாரம் சொந்த நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூற வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் வசித்து வருபவர்களில் பெரும்பான்மையானோர் வன்முறை போர் வரலாற்றை பின்னணியாக கொண்ட நாடுகளை சேர்ந்தவர்களே.

இவர்களுக்கு தங்கள் நாடுகள் குறித்து நேர்மறை எண்ணங்கள் ஏற்படவும் , நல்ல திருப்பங்கள் உண்டாகவும் அமைதிக்கான அமெரிக்க நிறுவனம் [U. S. Institute for Peace - USIP] மற்றும் சில தன்னார்வ அமைப்புக்கள் ஆகியவை இவர்களின் கருத்துப் பரிமாற்றம், கொள்கை மேம்பாடு ஆகியவற்றிற்காக கருத்தரங்கங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.

ஆனால் இது போன்ற கருத்தரங்களில் புலம்பெயர் நாடுகளில் வசித்து வரும் இளைஞர்கள் அதிகமாக பங்கேற்பதில்லை என்பது கசப்பான உண்மையே.

அமைதியை ஏற்ப்படுத்துவதில் இளைஞர்களின் பங்களிப்பை உறுதிசெய்யவும், அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் இளைய சமுதாயத்தினரின் அனுபவங்களை புரிந்து கொள்ளும் விதத்திலும், கொள்கை சார்ந்த விடயங்களில் அவர்களின் கருத்துக்களை ஒன்றிணைக்கவும் புலம்பெயர் இளைஞர்கள் மாநாடு ஒன்றை அமைதிக்கான அமெரிக்க நிறுவனம் இதுபோன்ற பிற அமைப்புக்களுடன் இணைந்து நடத்த முடிவு செய்துள்ளது.

இளைய புலம்பெயர் சமுதாயத்தினர் தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவும், அமைதியை உருவாக்குவதில் தங்களை எப்படி ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்பதை கற்றுக் கொள்ளவும் இந்த மாநாடு ஒரு வாய்ப்பாக அமையும்.

உகண்டா நாட்டின் முன்னாள் சிறார் போராளியான கிரேஸ் அகல்லோ இந்த மாநாட்டில் முக்கிய உரையாற்றுவார்.

தனது 15 வது வயதில் வடக்கு உகண்டா நாட்டின் ஆயுதப்படையினரால் சிறார் போராளியாக ஆக்கப்பட்டவர் கிரேஸ் அகல்லோ.

தற்போது அமைதி ஆர்வலராகவும், பேச்சாளராகவும் விளங்கி வருகிறார். வடக்கு உகண்டாவில் சண்டையை முடிவுக்கு கொண்டு வருதல் குறித்தும் சிறுவர்களை இது போன்ற செயல்களுக்கு பயன்படுத்துவதற்கு அனைத்துலக சமுதாயம் தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்பது குறித்தும் பேசியும் செயலாற்றியும் வருகிறார்.

‘வேர்ல்ட் விஷன்’ என்ற சேவை அமைப்பின் சார்பாக தொடர்ச்சியாக வாஷிங்டன் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இது குறித்து பேசியும் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாடு தொடர்பாக மேலதிக விபரங்களுக்கு: http://click.newsletters.usip.org/?qs=f215bea4af6ae277359108134b7908132d44915727e0022bbbd2a6aea320ed22

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.