தேர்தல் பிரச்சாரத்தில் ஈழ ஆதரவிற்கு தடை – இந்திய தேர்தல் ஆணையம்

banned20eelamஇந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. தற்பொழுது ஈழப்பிரச்சினையானது இந்திய அரசியலில் பேரளவில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈழ ஆதரவை ஒடுக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாவது இந்திய அரசியலில் ஈழ மக்களது பிரச்சினை பெரிதளவு பேசப்பட்டு வருகின்றது. ஈழ மக்களுக்கு ஆதரவாக தமிழ் மக்களிடத்தில் ஈழ மக்களின் நிலையை எடுத்துச்சொல்லும் வகையில் மனித நேயமிக்க அரசியல்கட்சிகளும் , அரசியல் சாரா அமைப்புகளும் துண்டறிக்கைகளையும் , சுவரொட்டிகளையிம் , பதாகைகளையும் வைத்து மக்களிடத்தில் தமிழுணர்வை ஊட்டிவருகின்றனர்.

தமிழகத்தில் எழுந்துள்ள ஈழ ஆதரவானது தமிழகத்தில் மட்டுமல்லாது , இந்திய முழுமைக்கும் ஒரு அரசியல் மாற்றத்தினை அமைக்கும் விடயமாக எழுச்சிபெற்றுள்ளது.

இந்நிலையில் இவ்வெழுச்சியை ஒடுக்கும் வகையில் ஈழம் சார்ந்த எவ்வித துண்டறிக்கைகளும் , சுவரொட்டிகளும் , பதாகைகளும் அச்சடிக்க கூடாது என்று அச்சகத்தினர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது. மீறி அச்சடித்தால் அச்சகத்தினர் மேல் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.