அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் மேலும் இரண்டு அகதிகள் படகுகள்
-
இவ் விடயம் 05. 06. 2010, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 19:08க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் மேலும் இரண்டு அகதிகள் படகுகளை அவுஸ்திரேலியக் கரையோரப் படையினர் கண்டு பிடித்துள்ளனர்.
முதலாவது படகில் 54 அகதிகளும் இரண்டாவது படகில் 28 அகதிகளும் இருந்ததாக அவுதிஸ்திரேலிய உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தப் படகுகளிலிருந்து மக்கள் அனைவரும் வழமை போல கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கப்பலில் இருந்தவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது குறித்த விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.