கல்முனையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிசார் அறிவிப்பு

கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த பாண்டிருப்பில் வீடொன்றிலிருந்து பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் அம்பாறை பொலிசாருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸ் கோஸ்டியொன்று இந்த ஆயுதங்களைக் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உரப்பைக்குள் போடப்பட்ட நிலையில் இந்த ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இது தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் தரப்புச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.