இந்திய மருந்துகள் இலங்கை தமிழர்களுக்கு போய்ச்சேருமா? – வைகோ கேள்வி

vaiko-200_32இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மக்கள் திரள் பொதுக்கூட்டம் வேலூரில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர்கள் வசிக்கும் பகுதியில் 4 பக்கமும் எதிரிகள் ஆயுதங்களுடன் நிற்கிறார்கள். நம் வரிப்பணத்தில் தயாரிக்கப்பட்ட இந்திய ஆயுதங்கள் இலங்கை இராணுவத்தின் கைகளில் இருக்கிறது.

இதுபோல் பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் ஆயுதங்களும் அவர்களது கைகளில் இருக்கின்றன. இந்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் பேசும்போது, கிளிநொச்சி விழுந்துவிட்டது, முல்லைத்தீவு பிடிபட்டது, ஆனையிறவு சாய்ந்தது என்று கூறினார்.

இலங்கையில் சொல்வதைப் போல் டெல்லியில் பிரணாப் முகர்ஜி கூறி இருக்கிறார். இத்தனையையும் சொல்லிவிட்டு தமிழர்களிடம் வந்து வாக்கு கேட்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கப் போகிறார்களாம், சுடுகாட்டில் மறுவாழ்வு கொடுத்து என்ன பயன்?

மருந்து இல்லாமல் உணவு இல்லாமல் ஒவ்வொரு நாளும் எத்தனையோ தமிழர்கள் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களுக்கு கொடுப்பதற்காக மத்திய அரசு சார்பில் மருந்து ஏற்றிக் கொண்டு கப்பல் இலங்கைக்கு சென்றுள்ளது. அதை இலங்கை அமைச்சர் பெற்றுக் கொள்கிறார்.

அந்த மருந்துகள் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு போய்ச் சேருமா?

போரை நிறுத்தச்சொல்லி உலகில் 100 க்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு சொல்லிவிட்டன. ஆனால் மத்திய அரசு இதுவரை சொல்லவில்லை. இதனால் உலக நாடுகளுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டு விட்டதுது இதற்காகத்தான் நாங்கள் கையெழுத்து இயக்கத்தை அறிவித்து இருக்கிறோம். தமிழர்கள் நாதியற்று போகவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.