மகிந்தாவுடன் சந்திப்பை தவிர்க்குமாறு பா.ஜ.கவுக்கு அமெரிக்கா தமிழ் மக்கள் கோரிக்கை
-
இவ் விடயம் 09. 06. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 11:06க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
மூன்று நாள் விஜயமாக இந்தியா சென்றுள்ள சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவை சந்திப்பதை தவிர்க்குமாறு பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர்களை அமெரிக்கா ஈழத் தமிழ் மக்கள் கேட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் மகிந்தாவை சந்திக்கும் தலைவர்களின் நற்பெயர்கள் பாதிக்கப்படும் நிலையே காணப்படுவதாக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தாம் பா.ஜ.க தலைவர் எல் கே அத்வானிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது, உலகளாவிய ரீதியில் நற்பெயரும் மதிப்பும் உள்ளது. ஆனால் உங்களுடன் மேற்கொள்ளும்; சந்திப்பின் மூலமும் அதன்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மூலமும் மகிந்தா அரசியல் இலாபங்களை தேட முற்படலாம். ஆனால் அது உங்களுக்கு அவமானமானது. அதனை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
2009 ஆம் ஆண்டு பல ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்களை மகிந்தாவின் படைச் சிப்பாய்கள் கொன்று குவித்துள்ளனர். 30,000 தொடக்கம் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கான உத்தரவுகளை வழங்கிய மகிந்தாவே பிரதம குற்றவாளி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.