அவுஸ்திரேலியாவை நோக்கி மேலும் ஒரு அகதிகள் படகு!

தாய்லாந்து ஊடாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்லும் அகதிகள் படகு ஒன்றை  கனேடிய அதிகாரிகள் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்துக் கடற்பிராந்தியத்தில் காணப்படும் இப் படகில் சுமார் 300 வரையிலான அகதிகள் இருக்கலாம் என அவதானிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவுரம் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக சட்டவிரோதமான முறையில் படகில் பயணித்துக் கொண்டிருப்பதாக கனேடியப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

இப் படகு விடுதலைப் புலிகளுடையது என நம்பப்படுவதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி அப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இப் படகு குறித்த தகவல்களை அவுஸ்திரேலியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் கனேடிய அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவை நோக்கி 300 பேர் படகில் வந்து கொண்டிருப்பதாக அவுஸ்திரேலியப் பத்திரிகை ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.