அனைத்துலக இந்தியத் திரைப்பட விழாவைப் புறக்கணித்த பாரத நாட்டு உறவுகளுக்கு!
-
இவ் விடயம் 09. 06. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 18:51க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
மே 2009 இல் சிறீலங்கா இனவெறி அரசு மேற்கொண்ட தமிழினப்படுகொலையைக் கண்டித்தும் ஈழச் சகோதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் சிறிலங்காவில் நடாத்தப்பட்ட சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளாமல் அவ்விழாவை தாமும் புறக்கணித்து, தமது சக கலைஞர்களையும் புறக்கணிக்க வைத்து சிங்கள அரசு மேற்கொண்டு வரும் பொய்ப்பிரச்சாரத்துக்குத் துணைபோகாது, தமிழினம் மீது சிங்களம் மேற்கொண்டுவரும் இனப்படுகொலையினை அனைத்துலகுக்கு எடுத்துகூறியுள்ளமை ஈழத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையையும் ஆதரவினையும் தந்துள்ளது.
தங்களது ஒற்றுமையான செயற்பாட்டின் மூலம், உறவுகளையும், வாழிடங்களையும் இழந்து சொல்லொணாத் துன்பங்களுக்குள் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழ் மக்கள் தாம் இழந்த உரிமைகளை மீளப் பெற்று, சுதந்திரமாக வாழ வழி செய்யுமாறு, தமிழ்நாட்டு அரசினையும் அதனூடாக மத்திய அரசிற்கும் அழுத்தம் கொடுப்பதோடு, அனைத்துலக ரீதியிலும் உங்கள் ஆதரவு அமைய வேண்டுமென்று உரிமையுடனும் அன்புடனும் கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்
பொன். மகேஸ்வரன்