அரசாங்கம் அறிவித்த போலி போர் நிறுத்த காலத்தில் மேலும் 6 பேர் பலி 17 காயம்

48 மணித்தியால போர் நிறுத்தம் அரசாங்கத்தின் போர் தந்திரமே.

இலங்கை அரசாங்கம் அறிவித்த 48 மணித்தியால போர் நிறுத்த காலத்தில் தொடரும் எறிகணைத் தாக்குதலும் போரும். இன்றும் அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்தினுள் கடுமையான எறிகணைத் தாக்குதல். தொடர்ந்து நடை பெறுகின்றது. இன்று(31 Jan 2009) காலை 6 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் இதில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 அடங்குவர். 17 பேர் படு காயமடைந்துள்ளனர்.

அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் புதுக்குடியிருப்பை நோக்கிய போர் நேற்றையிலிருந்து மும்முனைகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற இராணுவம் தீவிர முயற்சியிலுள்ளது. இருதரப்பும் பலத்த சண்டையில் ஈடுபட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் கிளர்ந்தெளும் புலம் பெயர் தமிழரையும் தமிழ் நாட்டையும் ஏனைய நாடுகளையும் ஏமாற்ற செய்த அறிவிப்பே போர் நிறுத்தம் என்பது இதிலிருந்து புலனாகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.