இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையின் அறிக்கை
-
இவ் விடயம் 20. 06. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 4:28க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் நடைபெற்று முடிந்துள்ள பன்னாட்டு இந்திய திரைப்பட விருதுவழங்கும் விழாவும்,அதனை தொடர்ந்து நடந்த வணிக மாநாடும் பெரும் தோல்வியில்முடிந்துள்ளது.
இதற்கென இலங்கை அரசு செலவிட்ட ஒரு பில்லியன் வரையான இலங்கை ரூபா விழலுக்கு இறைத்த நீராகி விட்டது. சிறீலங்கா அரசாங்கமும் அதன் கூலிப்படைகளும் தமிழ் மக்கள் மீது 60 ஆண்டு காலமாக நடாத்தி வருகின்ற தமிழின அழிப்பு போரானது, முள்ளிவாய்க்காலில் ஒரேநாளில் 40.000 இற்கும் மேற்பட்ட பொது மக்களை கொன்று குவித்து 21 ஆம் நூற்றாண்டில் இனஅழிப்பை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் முதன்மை நிலையில் உள்ளது.
இருப்பினும் தான் மேற்கொண்ட தமிழின அழிப்பு போரினை சர்வதேசத்திறகு மூடி மறைப்பதற்கு பலவிதமான சாயம் பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சிறீலங்கா அரசின் இவ்வாறான கபட நாடகத்தினை சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தும் நடவடிக்கைளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும்,இந்தியத் தமிழ் நாட்டு மக்களும், மனிதஉரிமை ஆர்வாலர்களும், மனித உரிமை அமைப்புக்களும் தமிழ் மக்களின் பேர் அவலத்தினை எடுத்துரைத்தும் கண்டித்தும் நிரூபித்தும் வருகின்றன.
இவ் வகையில் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் தொப்புள் கொடி உறவுகளான தமிழ் நாட்டு தமிழ் மக்களும் பல்வேறு வகையான எதிர்ப்புப் போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றனர். அவ்வகையில் சிறீலங்காவின் தலை நகர்கொழும்பில் இம்மாதம் 03ஆம் திகதியில் இருந்து 05ஆம் திகதி வரை நடை பெற்ற பன்னாட்டு இந்தியதிரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் அதிகளவு கலந்து கொள்வதை தவிர்த்து கொண்டமையினால் இவ் விழாவானது தோல்வியில் முடிவடைந்துள்ளது.
தமிழ் மக்களின் ஆன்மாவில் குடி கொண்டுள்ள உரிமை போராட்டத்தினை இவ்வுலகம் இன்னும் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? என்ற மன விரக்த்திக்கு உள்ளாகியிருக்கும் ஈழத்தமிழ் மக்களாகிய எமக்கு,எங்கள் தொப்புள் கொடி உறவுகளாகிய நீங்கள் செய்த இந் நற் காரியம் மீண்டும் ஓர் புத்துணர்வைத்தருகிறது.
சுதந்திரக் காற்றை சுவாசிக்க நினைத்த தமிழீழ சுதந்திர வீரர்களின், மக்களின் சுவாசங்களை நிறுத்தி, கதறக் கதற எம் தமிழ் சகோதரர்களை படுகொலை செய்த போதும், மனித நேயம் பேசிய உலகும், இந்தியாவும் சேர்ந்து வஞ்சித்த போதும், நீதியற்று நேர்மையற்று, இரத்தக்கறை பட்டுக் கிடந்தோம். அந்த இரத்தக்கறை படிந்த நாட்டில் நடந்தவிழாவை ஒன்று பட்டு நின்று, உறுதியுடன் எதிர்த்து சாதனை படைத்த உங்கள் அனைவரின்கரங்களையும் தோழமையுடனும் நன்றியுடனும் பற்றுகின்றோம்.
இத் திரைப்பட விழாவை புறக்கணித்ததென்னிந்திய திரையுலகத்தை சேர்ந்த அனைவருக்கும் இத்தாலிய ஈழத்தமிழர் மக்களவையும்இ இத்தாலி வாழ்ஈழத்தமிழ் மக்களும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை