கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளது

யாழ் குடாநாட்டில் எஞ்சியிருந்த விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களில் முதன்மையானதான கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் கடந்த ஒருவாரகாலமாக இடித்தழிக்கப்பட்டு இன்று முற்றாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருவாரகாலத்திற்கு மேலாக அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்லத் தடைவிதித்திருந்த படையினர் கனரக வாகனங்கள் மூலம் மாவீரர் துயிலும் இல்லத்தை முற்றாக இடித்தழித்துள்ளனர். இடித்தழிக்கப்பட்ட கல்லறைகள் நடுகற்கள் இரவோடு இரவாக வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு உள்ளன.

தற்போது இந்தக் போப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட பொதுச் சுடர் ஏற்றும் நினைவுத் தூபி தவிர்ந்த அனைத்துமே அழிக்கப்பட்டுள்ளன.
குடாநாட்டில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லமே முதன்மையாக இருந்தது. பெருமளவு இடத்தைக் கொண்டதாகவும் பெருமளவு மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடமாகவும் இருந்தது. இராசவீதியினுடாகச் செல்லும் இந்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கான வீதியை படைத்தரப்பினர் கடந்த 1 வருடத்திற்கு மேலாக மூடியிருந்தனர்.
குடாநாட்டில் உள்ள சாட்டி எல்லங்குளம் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்ட போதிலும் எஞ்சியிருந்தது இது மட்டுமே. தற்போது இந்த மாவீரர் துயிலும் இல்லமும் அழித்தொழிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.