லண்டனில் நடைபெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வு

பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள வெம்பிலியில் நேற்றைய தினம் கரும்புலிகள் நாள் நிகழ்வு நடைபெற்றது.

நேற்று 05-07-2010 திங்கட்கிழமை வெம்பிலி சென் மைக்கல் சேர்ச் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் முதலில் ஈகைச்சுடரினை ஓயாத அலைகள் மூன்று படைநடவடிக்கைக்கு வலுச்சேர்த்து வீரகாவியமான மாவீரர் கரும்புலி மேஜர் செழியன் (பாலமுரளி) அவர்களின் தந்தை திரு. மகேந்திரராஜா அவர்கள் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கரும்புலிகள் நினைவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. மலர்மாலை அணிவித்தபின் இதுவரை காலமும் போரினால் கொல்லப்பட்ட மக்களுக்காகவும், மாவீரர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து 2ஆம் லெப்ரினன் பூபதி (நிலா), மேஜர் இலங்கேஸ்வரன் ஆகிய இரண்டு மாவீரர்களின் சகோதரனான திரு குகதாஸ் அவர்கள் நிகழ்வை தொடர்ந்து முன்னின்று நடத்தினார்.
 
இந்த நிகழ்வில் பல மக்கள் வருகைதந்திருந்ததுடன் உணர்வுபூர்வமாக தமது வரலாற்றுக் கடமையையும், அஞ்சலிகளையும் செலுத்தி சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.