இலங்கைத் தமிழர்களுக்கு உடனடி புகலிட அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது – ஐ.நா

இலங்கைத் தமிழர்களுக்கு உடனடி புகலிட அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த காலங்களைப் போன்று இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக புகலிடக் கோரிக்கை வழங்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள சர்வதேச அகதிகள் தொடர்பான புதிய விதிமுறைக்கு அமைய இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையின் நிலைமைகள் சுமூகமடைந்து வருவதாகவும், இதனால் வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் இலங்கையர்களுக்கு உடனடி அகதி அந்தஸ்து வழங்கப்பட முடியாதென சுட்டிக்காட்டியுள்ளது.
 
தனிப்பட்ட நபர்களின் நிலைமை மற்றும் பின்னணியை கருத்திற் கொண்டு எதிர்வரும் காலத்தில் புகலிடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
 
இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்தும் சர்வதேக புகலிட அந்தஸ்து தேவையில்லை என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
எவ்வாறெனினும், யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் நிலைமைகள் இன்னமும் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை எனவும், சிலர் இன்னமும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள், சில ஊடகவியலாளர்கள், ஓரிணச் சேர்க்கையாளர்கள், சில சிறுவர்கள் மற்றும் பெண்கள் இவ்வாறு அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
முன்னாள் யுத்த வலயத்தில் தொடர்ச்சியாக பாலியல் மற்றும் பால் நிலை சமத்துவம் குறித்த துஸ்பிரயோகங்கள் தொடர்வதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, இலங்கையர்களுக்கு புகலிடம் வழங்கும் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்குமாறு மனித உரிமை கண்காணிப்பகம் அவுஸ்திரேலியாவிடம் கோரியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.