நாடு கடந்த அரசை தோற்கடிக்க அரசியல்த் தீர்வை முன்வைக்குமாறு ரணில் கோரிக்கை

சர்வதேச ரீதியில் ஈழ ஆதரவளார்களால் முன்னெடுக்கப்படும் நாடு கடந்த அரசு தொடர்பான செயற்பாடுகளை முறியடிப்பதற்கு அரசியல் தீர்வை முன் வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுக்களை நடத்துவதை ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்பதாக தெரிவித்த ரணில் இந்த பேச்சுக்களில் இணக்கப்பாடு ஏற்படுமிடத்து அதனை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்கும் எனவும் தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.