சரத் பொன்சேகாவை உயிருடன் புதைக்க வேண்டும் – மேர்வின் சில்வா

சரத்  பொன்சேகாவை உயிருடன் புதைக்க வேண்டும் என்றும் அதற்காக மயானம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்  என்றும் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசும்போதே மேர்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்த சரத் பொன்சேகா அதிர்ஷ்ட வசமாக இராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றியதாக தெரிவித்த மேர்வின் சில்வா ஜனாதிபதி அவருக்கு சகல வசதிகளையும் வழங்கியிருந்ததாகவும் தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போதும் சரத் பொன்சேகாவை கழுதை, நாய் என மேர்வின் சில்வா விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.