வற்றாப்பளை அம்மன் ஆலய பூசகரின் வீட்டில் ஆயுத முனையில் கொள்ளை!

வற்றாப்பளை அம்மன் ஆலய பூகசரும் அவரது குடும்பத்தினரும் ஆயுதமுனையில் மிரட்டப்பட்டு அவர்களின் வீட்டில் இருந்த பணமும் நகையும் திருடிச் செல்லப்பட்டுள்ளன.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது.

வற்றாப்பளை அம்மன் ஆலயத்தினை அண்மித்த பகுதியில் ஆலய பூசகரது குடும்பத்தினரின் இல்லம் அமைந்துள்ளது.

அது ஆலய வளாகத்தில் இருந்து சில நூறு மீற்றர்களுக்கு அப்பால் அமைந்துள்ளது.

குறித்த இல்லத்தினுள் சில நாட்களுக்கு முன்னர் புகுந்த ஆயுததாரிகள் பூசகரையும், அவரது குடும்பத்தினரையும் மிரட்டி அவர்களிடம் இருந்த அனைத்து நகைகளையும், பணத்தினையும் பிடுங்கிச் சென்றுள்ளனர்.

அவர்கள் கூச்சலிட்டாலோ வெளியில் யாரிடமாவதோ முறையிட்டாலோ கொலை செய்யப்படுவீர்கள் என்று திருடர்கள் மிரட்டிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை முள்ளியவளைக் கிராமத்திலும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

அண்மைய காலமாக வன்னியில் இடம்பெற்றுவருகின்ற தொடர் திருட்டுச் சம்பவங்களால் மக்கள் மத்தியில் பாரிய அச்ச நிலை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.