ஐ.நாவின் புதிய அறிவிப்பின் அடிப்படையில் இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்ப முடியும் ‐ அவுஸ்திரேலியா

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் பதிய வழிகாட்டிகளின் அடிப்படையில் இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான இலங்கை சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இவ்வாறு சரணாகதி அடைந்தவர்களை மீள நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
குறிப்பாக இலங்கையில் தற்போது சுமூகமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தொடர்ந்தும் வெளிநாடுளில் இலங்கையர்களுக்கு அடைக்கலம் வழங்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் புதிய வழிகாட்டல்களுக்கு அமைய அவுஸ்திரேலியா இலங்கை அகதிகள் தொடர்பில் கடுமையான வழிமுறைகளை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இலங்கை அகதிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதமர் கில்லார்ட் உள்ளிட்ட சிரேஸ்ட அமைச்சர்கள் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.