மில்லர் நினைவுச்சிலை முற்றாக அழிப்பு

நேற்று திங்கட்கிழமை ஜூலை 5, கரும்புலிகள் நாள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 1996 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் திகதியில் நெல்லியடியில் முதன் முதல் கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டவர் கரும்புலி மில்லர்.

அந்தத் தினமே கரும்புலி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அவரின் நினைவாக நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தின் முன்றலில் 1996 ஆம் ஆண்டில் இந்த நினைவுத்தூபி கட்டப்பட்டது. பின்னர் 2002 ஆம் ஆண்டில் இந்நினைவுத்தூபி மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து நடந்த போரின்போது மீண்டும் அதை இராணுவத்தினர் உடைத்தனர். ஆனால் அதன் சிதைந்த பாகம் அப்பகுதியிலேயே இருந்தது.

இந்நிலையில் ஜூலை 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கு சென்ற இராணுவத்தினர், மில்லரின் நினைவுச்சிலையை முற்றுமுழுதாக அழித்துள்ளனர். கரும்புலி நாளை குடாநாட்டு மக்கள் நினைவுகூரக்கூடாது என்ற நோக்கில் இலங்கை இராணுவத்தினர் இவ்வாறு அச்சிலையை முற்றுமுழுதாக அழித்துள்ளமையை அறிந்துள்ள அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.