பான் கீ மூனை எதிர்த்து ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டார் வீரவன்ச!

ஆளும் கட்சி அமைச்சரான விமல்வீரவன்ச தலைமையில் கொழும்பு பௌத்தலோகா மாவத்தையிலுள்ள ஐநா அலுவலகத்திற்கு முன்னால் பெருந்திரளான ஆர்ப்பாட்டாக்காரர்கள் திரண்டுள்ளதாhகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு திரண்டுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐநா அலுவலர்கள் எவரையும் அலுவலகத்துள் நுழையவோ அன்றி அலுவலகத்திலிருந்து வெளியெறவோ விடாமல் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐநாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தான் நியமித்த ஆலோசனை வழங்கும் குழுவை கலைக்காது விட்டால் தாம் அங்கிருந்து அகலப் போவதில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியிலிருந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசும் போது அமைச்சரான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
 
ஆர்ப்பாட்டக்காரர்கள் சாகும்வரையான உண்ணாவிரதத்தையும் அங்கு ஆரம்பித்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பௌத்தலோக மாவத்தையில் போடப்பட்டிருந்த பொலிஸ் தடையையும் உடைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் iநா அலுவலகத்திறகு முன்னால் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதேவேளை கடந்த வாரம் ஐநா செயலாளர் நாயகம் தான் நியமித்த நிபுணர் குழுவை விலக்கிக் கொள்ளாதவிடத்து ஐநா அலுவலகத்தைச் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.

எனினும் இதுபற்றி கருத்துத் தெரிவித்த ஐநா அலுவகம் விமல்வீரவன்சவின் கருத்து திரிபுபட்ட ஒன்றாக இருக்கலாம் என்று தெரிவித்தது. பின்னர் இலங்கை அரசாங்கம் அது தொடர்பில் மன்னிப்புக் கேட்கப் பொவதாகத் தெரிய வருகின்றது எனவும் தெரிவித்திருந்தது.

ஆனால் நேற்று இரண்டாவது தடவையாக ஐநா அலுவலகத்தைச் சுற்றி வளைக்க ஒன்று கூடுமாறு அமைச்சர் விமல் வீரவன்ச தனது ஆதரவாளர்களைக் கோரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.