சர்வதேச தாளங்களுக்கு ஆட முடியாது – ஹெகலிய காட்டம்!

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியன உட்பட சர்வதேச சமூகத்தின் தாளத் திற்கு இலங்கை ஒருபோதும் ஆடாது என்று அரசின் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாடிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் நன்மைகளுக்குத் தீங்கு விளை விக்கக்கூடிய எந்தத் தீர்மானத்தையும் அரசு ஒருபோதும் எடுக்காது. நாட்டின் நன்மையை உத்தேசித்தேசர்வதேச சமூகத்துடனான எமது நட்பும் அமையும். நாம் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுக்கு ஒருபோதும் மண்டியிடமாட்டோம்.

எமது வரவு-செலவுத் திட்டம் இந்த இரு அமைப்புகளின் ஆலோசனைகளுக்கு அமையவே தயாரிக்கப்பட்டிருக்கின்றது என்கின்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அர்த்த மற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை வாபஸ் பெறப்படுவதால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பான தனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் எனினும் பேச்சுவார்த் தைக்கான கதவுகள் திறந்தேயிருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளமை குறித்துக் கருத்துத் தெரிவித்த ஹெகலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக் கப்ட்ட நிபந்தனைகளை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். நாம் அதில் தெளிவாக இருக்கின் றோம். ஜி.எஸ்.பி. பிளஸ் இழப்பு சுமார் 85 மில் லி யன் யூரோ. அதே வேளை எமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாம் ஏனைய சந்தை வாய்ப்புக்கள் குறித்தும் ஆராய்கின்றோம் என அமைச்சர் ஹெகலிய தெரி வித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.