பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! “எமக்கு ஒரு நாடு வேண்டும்”

பண்டாரவன்னியன்  வன்னியில் இறுதிவரை போரிட்டு ஆங்கிலயே காலனித்துவ ஆட்சியாளர்களிடம் களமாடி இழந்தான், அதே இலட்சிய போரரட்டத்தில் எம் மாவீரர்களும், மக்களும் எமது தேசிய தலைவனின் பின்னல் நின்று அதே வன்னி நிலத்தில் எமது நிலங்களை காக்க,  தமிழ் மொழியைகாக்க, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையைகாக்க  களமாடினார்கள்.

வஞ்சக இரண்டகர் எம்மிடைய இருக்க, தளத்தில் மக்கள் பின்னல் நிற்க, புலம்மெங்கும் மக்கள் களம் காண இதுதான் மக்கள் போராட்டம் என்று நாம் கூறும் அளவுக்கு புலம் கொதித்து நிற்க இலட்சியத்தில் நம்பிக்கை கொண்டு இறுதிவரை களமாடினான் தமிழ் வீரர்கள்,

சிங்கள காலனித்துவம் அந்நிய நாட்டு உதவிகளுடன் நிற்க எமது வீரர்கள் தமது மக்களின் விடுதலையை மட்டும் மனதில் கொண்டு களத்தில் அந்த விடுதலைக்காக போராடினார்கள். உலகம் 40000 க்கு 

மேற்பட்ட உயிர்கள் பலி எடுக்கப்படுவதை பார்த்து கொண்டு இருந்தார்கள்.

இன்று எமது நாட்டை இழந்தோம், வீட்டை இழந்தோம், நிலத்தை இழந்துவிட்டு நிற்கின்றோம், பாலஸ்தீன மக்களும் எம்மை போல் தம் நிலம், வீடு, உரிமையை இழந்து விட்ட நிலையில் தோல்வியே வெற்றிக்கு படிக்கால், தமது போரரட்டத்தை தம்மால் எந்த வழியில் எடுத்து செல்லமுடியுமோ அத்தனை வழிகளிலும் போராட்டத்தை இட்டு செல்கிறார்கள்.

எம் தலைவன் தீர்க்கதரிசனமாக சிலசிந்தனைகளை சொல்லியிருகிறார்  “சுதந்திரத்தை வென்றடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும்; தன்மானம் இழந்து தலை குனிந்து வாழவேண்டும்; பயந்து பயந்து பதட்டத்துடன்   வாழவேண்டும்; படிப்படியாக அழிந்து போகவேண்டும். ஆகவே சுதந்திரதிட்க்காக போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை”   

தமிழருக்கு தாயகம்,  தமிழர்க்கு சுயாட்சி, தமிழருக்கு இறையாண்மை, தமிழனுக்கு தனித் தமிழீழம் என்று போராடி வந்த இனம் இன்று நிம்மதியாக வாழ இடம் கிடைத்தல் போதும், அடுத்த வேளை உணவு கிடைத்தால் போதும் என்ற நிலையில் ஏங்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. அவர்களை வழிநடத்திய மாவீரர்கள் மறைந்த பின், தம் மக்களின் நலன்களை சிந்திக்காது பதவி என்ற ஒன்றுக்காக ஆசைப்படும் அரசியல்வாதிகள் இந்த மக்களின் பிரச்சனை பற்றி கவலை கொள்ளாது ஸ்ரீ லங்கா அரசு நடாத்தும் தேர்தல்களிலும், எமது மக்கள் விடுதலை அடையாத பட்சத்திலும் கூட எம் மக்களின் கஷ்டங்களை எடுத்து கூறாமல் தேர்தலே குறிக்கோளாக நின்றார்கள்.

அங்கே உள்ளவர்கள்  இலங்கை அரசின் சர்வதிகார ஆட்சிக்கு பயந்து, இரண்டகர்களின்   கொடுமைக்குள் வாழ்த்தே ஆகவேண்டும் என்ற நிலையிலும், இலங்கையின் ஜனநாயகத்தில் நம்பிக்கை அற்ற நிலையிலேயே இப்போதும்  வாழுகிறார்கள்.

எம் பகுதியில் உள்ள கலாச்சார சின்னங்கள் அழிக்கப்படுகின்றன, எமது விடுதலை  போராளிகள் அமைத்த நினைவுச்சின்னங்கள், மாவீரர் துயிலும் இல்லங்கள் சிதைக்கபடுகின்றன; 200 வருடங்களுக்கு முன் எம் விடுதலைக்காக கடைசி வரை களமாடிய மாவீரன் பண்டரவன்னியனின் நினைவு சின்னமும் அழிக்கப்பட்டது. தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்தார்கள்    என்ற அடையாளமே இல்லாமல் செய்யும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழர்கள் விடுதலை  அடைய தன்னுயிரை எம் மக்களுக்காக தியாகம் செய்த திலீபனின் நினைவு தூபியை மனிதாபிமானம் அற்றவர்கள் உடைத்து எறிந்தார்கள், அதை தட்டி கேட்க யாருமில்லை, மக்கள் தான் ராணுவ பயங்கரவாதத்துக்குள் வாழ்கிறர்கள் .இன்றும் திலேபன் போல் தன்னுயிரை தியாகம் செய்த பல பிள்ளைகளுக்கு தாயான அன்னை பூபதி அம்மாவின் நினைவையும் நினைவு கூறுகிறோம், அங்கே அந்த நிகழ்வை நடத்த மக்களால் முடியாது. எமது ஜனநாயக உரிமைகளுக்காத்தான் இவர்கள் சாத்வீக போரரட்டம் செய்தார்கள் 

சிங்களவர்களின்  ஆணவமும் திமிரும் உச்சத்தில் நிற்க, இவர்களை தட்டி கேட்க வேண்டியே அரசியல்வாதிகள் அமைதியாக இருக்க, நாம் அடிமைகளாக வாழ போகிறோமா, அடிமைகளாக எமது தாய் நிலங்களுக்கு செல்லபோகிறோமா? இதை நாம் எம்மையே கேட்க வேண்டும். எமது மாவீரகள் அனைவரும் மறைந்து விடவில்லை, அவர்கள் பார்த்துக்கொண்டு மனம் எரிந்து கொண்டிருகிறார்கள், அடிமை சங்கிலிகளை உடைத்து எறிய தமிழனை அவர்கள்  தங்கள் துயிலிலிருந்து எழுப்புவார்கள் , அதுவரை எம் மக்களுக்காக போராட  வேண்டியது நாங்கள். நாங்கள் யாரையும் பார்த்து பயப்படவேண்டியது    இல்லை, போராட்ட சுதந்திரம், எழுத்து சுதந்திரம் எம்மிடம் உள்ளது. எமது அரசை புலம்பெயர்த்து ஒவ்வொரு நாடுகளிலும் தமிழீழ தேசிய அரசியல் கட்டமைப்புகளாக   உருவாக்கி வரும் நாங்கள்  இழந்த உரிமைகளை மீண்டும் எம்மக்களிடம் ஒப்படைக்க சொல்லவேண்டியது நாம் புலம்பெயர் தமிழர்கள்.

எதுவும் முடியாது என்று சொல்லும் எல்லோரும், ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள், நாம் ஒரு தேசிய இனமாக மாறுவதன் புலம், ஒரு அரசாக மாறுவதன் மூலம், எம்மை பலம்வாய்ந்த புலம்பெயர் அமைப்புக்களாக  பல வழிகளிலும் மாற்றுவதன் முலம், இங்கே நாம் வாழும் நாடுகளில், நாம் வாழும் அரசுகளுடன் பேசும் பிரதிநிதித்துவத்தை 

உருவாகுவதன் முலம், தேசிய அரசுகள், மக்களின் நட்பினை பெறுவதன் முலம், எம் தேசியத்தின் அங்கீகரிப்பின் முலம் நாம் பல வெற்றிகளை அடையலாம்.

எங்களால் முடியும் என்ற நம்பிக்கை எம்மிடம் நிறையவே இருக்கிறது, அந்த நம்பிக்கையின் பேரில் தான் முள்ளிவாய்காளில் எமது போராட்டம் முடிந்துவிடவில்லை, அதன் தொடர்ச்சியாக தமிழீழ மக்கள் பேரவையின் செயட்பாட்டளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழரின் தணியாத தாகத்தை எல்லா நாடு அரசுகளுக்கு எடுத்துச்செல்லும் முகமாக எமது மக்களின் ஜனநாயக விருப்பு என்ன என்று எடுத்து கூறினோம், அதை உலகதமிழர் பேரவை  மகாநாட்டில் பல அரசுகள் புரிந்து கொண்டன. இன்று மாற்றங்கள் உருவாகின்றன, அந்த மாற்றங்களுக்கு அமைய நாம் மாறவேண்டும். ஸ்ரீ லங்கா அரசின் முலம் நாம் அடிமை வாழ்வு தான் வாழலாம்.   

நாம் தமிழர்கள் தலைகுனிந்து வாழ மாட்டோம்,    

அரசியல் கட்டமைப்புகளாக எல்லா நாடுகளிலும் எமது மக்களின் உரிமைகளை வலியுறுத்தும் பலமான அரசியல் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும், தமிழீழம் நோக்கிய எமது பயணம் வெல்லும்.

தளத்தில்  பலியான மக்களின் ஆன்மாகளின் இலட்சியகளை வென்று அங்கு பேசவும் முடியாமல், சொல்லி அழவும் முடியாமல் வாழும் மக்களுக்கு பலமமாக இருப்போம்,

 நாளை எமது தேசம் மீண்டும் உருவாகும்.   
விழ விழ எழுவோம், தமிழீழ தாகம் தணியாது
ஒன்றிணைவோம்

காலம். 07. 07. 2010 புதன்கிழமை பி.பகல் 15.00மணி முதல் 18.00 மணிவரை பிரெஞ்சு பாராளமன்றம் (Assemblée Nationale )முன்பாக (Metro) : Assemblé Nationale ligne 12 , Invalides  ligne 8 et 13 
 
 தொடர்பு: 06 15 88 42 21

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.