தானும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக விமல் வீரவன்ச மிரட்டல்

ஐநா சபையின் கொழும்பு அலுவலகத்தின் முன்னால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது பொலிசார் நடவடிக்கைகளில் இறங்குமிடத்து தாமும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வீடமைப்புத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இன்று காலை விமல் வீரவன்ச தலைமையில் சுமார் ஆயிரம் பேர் கூடி நடத்திய ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாகவும் இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அவ்விடத்திற்கு மீண்டும் வந்த விமல் வீரவன்ச பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு உடனடியாக அவ்விடத்திலிருந்து பொலிசாரை அகற்றிக் கொள்ளுமாறும் இல்லாவிட்டால் தாமும் உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாகவும் மிரட்டியதாகத் தெரிய வருகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.