வட,கிழக்கு மாகாணங்களில் மூன்று இலட்சம் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளது – பிரிகேடியர் உபயமெதவல

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை சுமார் மூன்று இலட்சம் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உபயமெதவல தெரிவித்தார்.

சதுர கிலோமீட்டர் 1732 பரப்பில் மொத்தம் 290445 நிழக்கன்னி வெடிகள் அகற்றப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். முல்லைத் தீவில் 16749 ம், கிளிநொச்சியில் 57710 ம், மன்னாரில் 59379 ம், யாழ்ப்பாணத்தில் 10408ம், வவுனியாவில் 30905ம், மட்டக்களப்பில் 16320ம், அநுராதபுரத்தில் 1873ம் , பொலன்னறுவையில் 957ம், திருகோணமலையில் 4983ம் அகற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இப்பணிக்காக 28 அதிகாரிகளுடன் 1203 படைவீரர்களையும் பயன்படுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.