மட்டக்களப்பில்,தமிழர்களை வெயிலில் இருக்கவைத்த வைத்த படையினர்

மட்டக்களப்பின் மேற்கே படுவான்கரை பகுதியில் உள்ள கடுக்காமுனை மற்றும் அம்பிலாந்துறை ஆகிய இடங்களில் வீதிப் பாதுகாப்பிற்காக நின்ற சிறீலங்கா இராணுவத்தினர் அந்த வவழியால் பிரயாணம் செய்த தமிழர்களைப் பிடித்து பல மணிநேரமாக வெயிலில் இருத்தி வைத்துவிட்டு பின்பு விடுவித்தனர்.

பிடித்து வைத்த மக்களிடம் விடுதலைப்புலிகள் அந்தப் பகுதிக்கு வந்தது தொடர்பாக வினவியதுடன் “அவர்கள் வந்தால் உடனே தங்களுக்கு சொல்ல வேண்டும் ‘ என்று மிரட்டயதாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர்.

இந்த பிரதேசம் முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.