ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது

ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அலுவலக ஊழியர்கள் அனைவரும் நாளைய தினம் வீட்டில் இருந்தே பணிகளை ஆற்றும்படி கேட்கப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னரான செயற்பாடுகள் குறித்து நாளைய தினம் அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் விமல் வீரவன்ச குழுவினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் அச்சுறுத்தலைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய கொழும்புச் சம்பவங்கள் குறித்து நியுரோர்க் நகரிலுள்ள ஐ.நா தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவிக்கும் போது இலங்கையின் நிகழும் நிகழ்வுகளைத் தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் உரிய நடவடிக்கைகள் குறித்து கொழும்பு அலுவலர்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.