வடமராட்சி வெற்றிலைக்கேணியில் கடற்படை வீரர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் கடற்படை வீரர் ஒருவரின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

வெற்றிலைக்கேணிப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கேட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி நீதிபதி சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கும்படி பணித்ததுடன் பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.