பா‌ர்வ‌திய‌ம்மா‌ள் இ‌ந்‌தியா‌வி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌ற ‌விரு‌ம்ப‌வி‌ல்லை – ம‌த்‌‌திய அரசு ப‌தி‌ல்

விடுதலை‌ப் பு‌லிக‌ள் இய‌க்க‌த்தின் தலைவ‌ர் பிரபாகர‌னி‌ன் தாயாரான பா‌ர்வ‌திய‌ம்மா‌ள், இ‌ந்‌தியா‌வி‌ல் ‌சி‌கி‌ச்சை பெறுவதற்கு ‌விரு‌ம்ப‌வி‌ல்லை எ‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தா‌க்கலான பொது நல மனு‌வி‌ற்கு ம‌த்‌திய அரசு ப‌தி‌லளி‌த்து‌ள்ளது.

என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதம், மலேசியாவிலிருந்து சென்னைக்கு சிகிச்சைக்காகச் சென்ற பார்வதியம்மாள், விமான நிலையத்திலேயே அந்நாட்டு அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டார்.

இதனை எதிர்த்து செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்தி‌ல் பொது நலன் வழக்கொன்று தொடரப்பட்டது. அதில், பார்வதியம்மாளை மலேசியாவில் இருந்து சிறப்பு விமானத்தில் தமிழகம் அழைத்து வந்து சிகிச்சையளிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு இ‌ன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது ம‌‌த்‌திய அரசு சா‌ர்‌பி‌‌ல் ப‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

அந்த பதில் மனுவில் “பிரபாகர‌னி‌ன் தாயா‌ர் பா‌ர்வ‌திய‌ம்மா‌ள் இ‌ந்‌தியா‌வி‌ல் த‌ற்போது ‌சி‌கி‌ச்சை பெ‌ற ‌விரு‌ம்ப‌வி‌ல்லை” எ‌ன்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ம‌த்‌திய அர‌சி‌ன் இ‌ந்த ப‌தி‌லை ஏ‌ற்று‌க் கொ‌ண்ட ‌நீ‌திப‌திக‌ள் வழ‌க்கு ‌விசாரணையை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்ததாக மேற்படி செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.