ஐக்கிய நாடுகள் சபையின் வாகனங்கள் வடக்கு, கிழக்கிற்கு செல்ல புதிய நடைமுறைகள்!

ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்களின் வாகனங்கள் வடக்கு, கிழக்கிற்கு செல்லும் போது புதிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
ஏனைய சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு தொண்டு நிறுவனங்களுடன் ஒப்பீடு செய்யும் போது, ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்களுக்கு விசேட நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த விசேட நடைமுறைகள் குறித்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவாகவும், இறுதி ஆவணம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின்  அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதியின் விசேட செயலணி தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்கள் உள்ளிட்ட சகல சர்வதேச தொண்டு நிறுவனங்களும் விசேட அனுமதியைப் பெற்றுக் கொண்டதன் பின்னரே வடக்கு, கிழக்கிற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
 
இதேவேளை, பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஐக்கிய நாடுகள் சபை சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.