அரசாங்கத்தின் தவறுகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகை கிடைக்காது போயுள்ளது

அரசாங்கத்தின் தவறுகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகை கிடைக்காது போயுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம்சுமத்தியுள்ளார்.

வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் 17வது அரசியல் சாசனத் திருத்தத்தை அமுல்படுத்தல், பயங்கவாத தடைச்சட்ட மற்றும் அவசரகாலச் சட்டத்தை நீக்குதல், உள்ளிட்ட 15 நிபந்தனைகளை விதித்திருந்தது.

அரசாங்கம் முயற்சித்திருந்தால், இந்த நிபந்தனைகளுக்கு அடிப்பணியாது ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொண்டிருக்கலாம் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.