சிறீலங்கா அமைச்சர் தலைமையிலான காடையர்களே ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்: இன்ன சிற்றி பிரஸ்

சிறீலங்கா அரச தரப்பு அமைச்சர் விமல் வீரவன்சா தலைமயில் சென்ற காடையர்களே கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளதாக ஐ.நாவின் ஊடக அமைப்பான இன்ன சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு பணியாளர்களை பணயக்கைதிகளாக பிடிக்கப்போவதாக ஆறு நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்த அமைச்சர் தற்போது முற்றுகையை மேற்கொண்டுள்ளார்.

விமலின் எச்சரிக்கையை ஐ.நா உயர் அதிகாரி அது ஒரு காந்தீய எச்சரிக்கை என தெரிவித்திருந்தார். ஆனால் அவர் காடையர்கள் சகிதம் ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளார்.

சிறீலங்கா அரசு தம்மிடம் மன்னிப்பு கேட்கலாம் என ஐ.நா தெரிவித்திருந்த நிலையில் சிறீலங்கா அரசு வன்முறைகளை மேற்கொண்டுள்ளது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.