மானாட, மயிலாட கண்டு செம்மொழி மாநாடும் கண்டோம். சாதனை பாரீர்… பாரீர்… பாரீர்…

செம்மொழி மாநாடு… ம் செத்துத் தொலையும் முன் இதைமட்டும் ஏன் விட்டுவைப்பான் என்று முக்கி, முனகி நடத்தி முடித்து விட்டார் கொலைஞர் கருணாநிதி. தலைவர் தலைவர் என்று கைத்தடிகள் மட்டுமல்லாது தன் மகனும் கூவுவதை ரசித்து, தானே உலகத் தமிழினத்தலைவன் என்ற பெருநினைப்பு கொலைஞருக்கு. தலைவன் என்பதன் கருத்தறியாதவன் தமிழ் வளர்த்தானாம், தலைவன் ஆனானாம்.

தமிழுக்குக் கிடைத்த கேடு நீ கருணாநிதி. தமிழினத் தலைவனாவதற்கு குறைந்த பட்சம் ஒரு தகுதியாவது உன்னிடம் இருக்கிறதா? போராட்டம் நடந்த காலங்களில் சகோதர யுத்தம், சகோதர யுத்தம் என்று சப்பை காரணங்கள் சொல்லிக்கொண்டு கண்ணை இறுக மூடிக்கொண்டிருந்தாய். ( இது போராட்டம். களையெடுப்பது கட்டாயம். அதைப் புரிந்து கொள். சகோதர யுத்தம் என்றால் என்னவென்பதை அழகிரியும் ஸ்டாலினும் உனக்குப் புரிய வைப்பார்கள் பொறுத்திரு.) ஈழத்துக்காக நீ ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை, அதற்கான இடத்தில் இருந்தும் கூட. நீ உண்மையான தமிழனாக இருந்திருந்தால், ஈழப்போராட்டம் என்றோ வெற்றி கண்டிருக்கும். அல்லது எம் ஜி ஆருக்குப் பதிலாக நீ போயிருந்தாலும் நாம் தமிழீழம் கண்டிருப்போம்.

நீ வாழ்வதால் தமிழினம் அழியுமே தவிர, தலைநிமிராது. பதவிக்கும், பணத்துக்கும் கூழைக் கும்பிடு போட்டு இனமானம் துறந்த பச்சோந்தி நீ. கடைக்குட்டி பேரனுக்கும் பதவி வாங்கி கொடுப்பதற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சோனியா சேலை துவைக்க நொண்டியேனும் டெல்லிக்குச் செல்வாய், ஈழமக்கள் கண்ணீர் துடைப்பதற்கு மட்டும் கடிதம் எழுதுவாய் அவளுக்கு. முதுகெலும்பு இல்லாத உன்னை என்ன சொல்வது என்ன செய்வது. நீ சோனியாவுடனும், ஜெயலலிதாவுடனும், புதிதாக குஷ்புவுடனும்… எப்படியோ போ. உனக்கு அதற்குத் தானே நேரம் இருக்கிறது!

எங்கே வீரன் பிரபாகரன் தலைவன் ஆகிவிடுவானோ? உலகத்தமிழினம் அவன்பின்னே அணிவகுத்து விடுமோ? குள்ளநரி நான் செல்லாக் காசாகி விடுவேனோ? என்கிற கேவலமான நரித்தனம் உன்னை வெகுகாலமாகவே குடைந்தது. விளைவு ஆசிய வல்லரசுகள் சேர்ந்து புலிகளை ஒழிக்க முனைந்த போது பொத்திக் கொண்டு வேடிக்கை பார்த்தாய். கிளர்ந்து விடத்துடித்த தமிழ் உணர்வலைகளைக் கூட உன் கூலிப்படைகளை வைத்து ஒடுக்கினாய்.

முத்துக்குமார் என்ற வீர மறத்தமிழனின் வரிகளே போதுமே உன் அயோக்கியத் தனத்தை அம்பலப்படுத்த. ஒன்றைப் புரிந்து கொண்டாயா? 30 வருடங்களுக்கு மேலாக சிங்கள இனவாதிகளுக்கு பிரபாகரன் சிம்மசொப்பனம். அவனை அசைக்க முடியவில்லை. நாடாளத் தெரியாத, ராஜதந்திரம் கற்காத ராஜபக்சே வந்தான், எல்லா வல்லரசுகளிடமும் கையேந்தினான், ஒட்டு மொத்த இலங்கையையும் அவர்களுக்கு தாரை வார்த்தான். விளைவு புலிகளின் தற்காலிக முடிவு.! (சிங்கள தேசம் தன்னை காவு கொடுத்து விட்டதை உணர வெகுகாலம் எடுக்காது, அது வேறு விடயம். ) சிறு படையணியாக இருந்தாலும், சிறு தேசமாக இருந்தாலும், அந்த இயக்கத்தின் கட்டமைப்பை, கட்டுக்கோப்பை, எல்லா வளங்களையும் கொண்ட சிங்கள தேசத்தால் உடைக்க முடியவில்லை. பாக்கிஸ்தான் இந்தியா மியன்மார், போன்ற பெட்டை நாடுகள் மட்டுமல்லாது, சீனா ரஷ்யா என்ற வல்லரசுகள் உட்பட இருபது நாடுகளின் உதவி தேவைப் பட்டது. அதோடு மூன்று வருடமாக போராடவும் வேண்டியிருந்தது. மக்கள் பலம் தவிர எந்தப் பின்புலமும் இல்லாத சிறு புலிப்படையை ஒழிக்க!! இதிலிருந்தே புரிந்துகொள் தலைவன் வீரத்தை. பிரபாகரன் என்ற மாமனிதனின் பெயரை தயவு செய்து நீ உச்சரிக்கவே முனையாதே. அந்தக் கேவலம் அவருக்கு வேண்டாம்.

ஈழம் என்பதில் தனக்கு உடன்பாடு இல்லையாம், கருணாநிதி தான் உலகத்தமிழினத் தலைவராம். சொல்கிறார் இலங்கைக் கயவன் சின்னத்தம்பி. நீயுமா சின்னத்தம்பி?எதைக் கொடுத்து மயக்கினான் கருணாநிதி உன்னை? தேசங்கள் இழந்து, தன்மானம் இழந்து, ஏதோ பூச்சி புழுக்களைப் போல உயிர்கொண்டிருந்தாலே போதுமென்று வாழ்ந்து வந்த தமிழினத்தில், பல நூற்றாண்டுகளின் பின் தோன்றிய விடிவெள்ளி தலைவன் பிரபாகரன். தமிழரின் வீரத்தை மீண்டும் உலகறியச் செய்தவன் பிரபாகரன். நானும் தலைவன், நானும் தலைவன் என்று கிளம்பி, எதிரிகளிடம் சோரம் போன எத்தனையோ எட்டப்ப தறுதலைகளுக்கு மத்தியில், கொண்ட கொள்கையில் எள்ளளவும் பின்வாங்காமல், இறுதிவரை போராடிய பெருந்தலைவன் பிரபாகரன். தான், தன் குடும்பம் என்ற சிறுமைத்தனம் அவரிடம் காணக்கிடைக்காதது. அதனால் தான் அழிவில் அவர் குடும்பமும் அடங்கியது. நெருப்பை விழுங்கிய வேதனை எம் தலைவனுக்கு. கண்முன்னே சிதைக்கப் பட்ட தமிழினத்தின் வலி தலைவனுள் மட்டும் தான் முழுமையாய். ஏனெனில் அவர் தமிழன், ஆனால் நீ, சங்கிலிப் போராட்டம் என்று சொகுசு காரில் வலம் வந்தாய்.

சொகுசு மெத்தையில் சுற்றிவர ஏசி யில் கொஞ்சம் கூட கூச்சமின்றி, உண்ணாவிரத நாடகமாடினாய். எல்லாம் முடிந்து விட்டது என்று உடனேயே அரைகுறை ஆடை அம்மணிகளின் தொடையாட்டம் பார்க்கக் கிளம்பி விட்டாய். அது இன்னமும் முடிந்த பாடில்லை. நீ தமிழருக்கு தலைவன்! தூ… இப்போது மட்டுமல்ல எப்போதுமே பிரபாகரன் தான் தமிழினத்தின் தலைவன். வழிகாட்டி. வேண்டுமானால் உலகத் தமிழரிடத்தில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்து புரியும்.
நாட்டை மறந்து, மக்களை மறந்து, ஏன் தமிழன் என்பதையே மறந்து, தன் குடும்பம், தன் சொந்தம், தன் உறவுகளுக்காகவென்று நாட்டையே சூறையாடி ஏழேழு தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்தாலும், எங்கே தான் மண்டையைப் போட்டு விட்டால், பதவிக்காக எல்லோரும் வெட்டிக்கொண்டு செத்து விடுவார்களே, என்கிற பேரச்சம் காரணமாக இந்த வயதிலும் முதலமைச்சர் சாய்வு நாற்காலியில்! படுத்திருக்க வேண்டிய நிலை.

நிலை என்பதை விட இழிநிலை என்பதே பொருத்தமாக இருக்கும். ஒரு அரசு ஊழியருக்கே 55 – 60 வயதில் ஓய்வு தரப்படுகிறது. ஆனால் அரசையே நடத்துபவருக்கு வயது 87. குடும்ப ஒற்றுமைக்காக கருணாநிதிக்கு 200 வருட ஆயுளைக் கொடு கடவுளே என்று பிரார்த்திப்போமா? பாவம் கருணாநிதியா? தமிழக மக்களா? இருந்தாலும் இத்தனை வயதிலும் பெண், புகழ், பதவி என்று அலைவது கேவலம். உலகில் வேறெங்குமே இல்லாத மகா கேவலம் தமிழினத்துக்கு. எம் ஜி ஆர் இளவயதில் ஜெயலலிதாவை வைத்திருந்தார். அரசியலுக்கும் கொண்டு வந்தார். அது இயல்பு ஏற்கக்கூடியது. ஆனால் இந்த வயதில் கருணாநிதிக்கு குஷ்பு தேவையா? எழுந்து நிற்கவும், உட்கார வைக்கவும், படுக்க வைக்கவும் உதவி தேவைப்படும் இந்த வயதில் குஷ்புவை வைத்து என்ன செய்யப் போகிறாரோ!. பாராட்டுவிழா, பாராட்டுவிழாவுக்கு ஒரு பாராட்டுவிழா ந்டத்தி அரைகுறை ஆடைகளுடன் பெண்களின் அங்கங்களை கருணாநிதியின் நொள்ளைக் கண்களுக்கு விருந்து படைத்த மாமாப் பையன்களால் வந்த வினைதான் தி மு க வில் குஷ்பு. ம்… தமிழ்நாட்டிலும் திவாரி சவாரி. தான் இல்லை என்றால் கட்சியும் க்ளோஸ், குடும்ப ஒற்றுமையும் க்ளோஸ் என்பது கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். பதவிக்காக உறவுகளுக்குள் கனன்று கொண்டிருக்கும் பகை எப்படிப் பட்டதென்று நன்கு அறிந்தே இருப்பார்.

அதனால் லாலு ஸ்டைலில் தனக்குப் பின் தன் மனைவிகளையே! முதல்வராக்குவோம் என்றும் யோசித்திருப்பார். பாவம் அந்தப் பூச்சிகள் இதற்கெப்படி சரிப்படும்?. மீண்டும் மீண்டும் மண்டையைப் போட்டுக் குடைந்ததில் கிடைத்தது தான் குஷ்பு. “பாதுகாப்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்” என்ற குஷ்புவின் பேவரைட் “என்னே முற்போக்கு! சிந்தனை” என்று கருணாநிதியை வாய் பிழக்கச் செய்து விட்டது. விளைவு? மு க வுக்கும் குஷ்பு. தி மு க வுக்கும் குஷ்பு.
நன்றாகத்தான் கணக்குப் போடுகிறார் கருணாநிதி. அன்று கற்பு என்றால் கண்ணகி, கோயில் கட்டினார்கள். இன்று கற்பு என்றால் குஷ்பு அவளுக்கும் கோயில் கட்டினார்கள். கோயிலே கட்டியவர்கள் கேவலம் குஷ்பம்மனுக்காக ஓட்டா போட மாட்டார்கள்?. தவிர இருக்கவே இருக்கிறது 3 கூலிப்படைகள். மற்றும் இலவசம் என்னும் பேராயுதம்.

01 ஸ்டாலின் கூலிப்படை (உடன் பிறப்பு ரவுடிகள்)
02 அழகிரி கூலிப்படை (அஞ்சா நெஞ்சன்!! குஞ்சுகள்)
03 கருணாநிதி கூலிப்படை (தமிழ்நாடு போலீஸ்)

நாடு முழுவதும் மதுக்கடை விரித்து, மக்களை குடிகாரர்களாக்கி, அந்தப் பணத்தை உறிஞ்சி, உணவுக்கே வழியற்றுப் போகச் செய்துவிட்டு, தேர்தல்களின் போது அதே பணத்தில் இலவசங்களால் அடிப்பது. கட்டுக் கட்டாக நோட்டை இறைப்பது. குவாட்டர், கோழி பிறியாணியுடன் முப்படைகளையும்!!! களத்தில் இறக்கி அராஜகம் செய்து ஓட்டுக் கொள்ளையடிப்பது. தவிர முடிந்தளவு கள்ளவோட்டு போடுவது. ஏன்? அது சரி சும்மா போட்டால் தின்னக் காத்திருக்கும் மந்தைகளும், சதைக்கு கோயில் கட்டும் மடபக்தர்களும், கோடிகளை ஏப்பம் விடக் காத்திருக்கும் கூட்டணிகளும் இருக்கும்வரை 110 வயது வரை கிழவனின் ஆட்சிதான்.

பொறுக்க முடியாத அழகிரியும் ஸ்டாலினும் சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று ஒதுங்கி விடுவார்கள். பின் குஷ்பம்மன் ஆட்சி தொடங்கிவிடும். கருணாநிதியின் பிள்ளைகள் சண்டை மறந்து சித்தீ… என்று அவரை அன்போடு அழைக்க தமிழ்நாட்டுக்கு இன்னோரு அம்மன் அம்மா ரெடி. எம் ஜி ஆர் போனா ஜெயலலிதா. கருணாநிதி போனா குஷ்பு. தமிழ்நாட்டுல இதெல்லாம் சகஜமப்பா. தள்ளாத வயதிலும் கொலைஞருக்குத் தான் எத்தனை திட்டங்கள்?.

சரி இனியென்ன செம் “மானாடும்” முடிந்து விட்டது. அதற்கு பாராட்டு விழா ஏற்பாடாகி இருக்கும். திரும்பவும் மானையும், மயிலையும் ஆட்டுவிப்பார்கள்! போய்ப் பார். வாழ்க நீ. வளர்க உன் குடும்பம்.

பாராட்டு பாராட்டு- என்
மனம் குளிர பாராட்டு
புகழ் பாடு புகழ் பாடு – என்
காதுகுளிர புகழ் பாடு
இடையாட்டு தொடையாட்டு-என்
கண்ணெதிரே மாராட்டு
மானாட மயிலாட -என்
மனமாடும் அது பார்த்து
காலாட கையாட -என்
ஆசைமட்டும் ஆடவில்லை நாடாள…
முத்தமிழ் அறிஞர்! கயவன் கருணாநிதி.

பா பிரதீப்
theebanbala@hotmail.com

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.