குடும்ப ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.தே.க ஆர்ப்பாட்டம்!

சர்வாதிகாரத்துக்கு எதிரான ஒரு குடும்பத்தின் நலனுக்காகக் கொண்டுவரப்படவுள்ள அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி நேற்று நாடாளுமன்றத்துக்கு முன் னால் ஆரம்பித்தது.

ஐ.தே.கட்சி எம்.பிக்கள் அனைவரும் நேற்றுக்காலை நாடாளுமன்றத்துக்கு முன்னால் சுலோக அட்டைகளை ஏந்தி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் நேற்றுக்காலை இந்த ஆர்ப்பாட்டம் நாடா ளுமன்றத்துக்கு முன்னால் இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் அனைவரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்னர் உயிரைக் கொடுத்தாவது ஜனநாயகத்தைக் காப்போம், ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொண்டுவரப்படவுள்ள அரசமைப்புத் திருத்தத்தைத் தடுப்போம் என ஒருமித்த குரலில் உறுதியெடுத்துக் கொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இங்கு கூடியிருந்த எம்.பிக்கள் மத்தியில் உரையாற்றினார்.

  • குடும்ப நலனுக்காக ஜனநாயகத்தைப் பலியிடாதே!
  • 17ஆவது அரசமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்து!
  • குடும்பத்தின் எதிர்காலத்துக்காக நாட்டின் எதிர்காலத்தைப் பலியிடாதே!
  • திருட்டுத்தனமான அரசமைப்புத் திருத்தங்களை வாபஸ் பெறு!

மேற்கண்ட வாசகங்களுடனான சுலோக அட்டைகளை ஐ.தே.கட்சி எம்.பிக்கள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்களிடமிருந்த சுலோக அட்டைகளில் தனிச்சிங்கள எழுத்துகள் மாத்திரமே இடம்பெற்றிருந்தன. தமிழ் அல்லது ஆங்கில எழுத்துகள் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.