பார்வதி அம்மாளின் உடல் நிலை கவலைக்கிடம்

பார்வதி அம்மாளின் உடல் நிலை கடந்த சில நாட்களாக மோசமான உள்ளதாகவும் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சற்று முன்னர் தெரிவித்தார்.

அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. தற்போதும் பிரதேச வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றார். பேசக்கூடிய நிலையில் உள்ளார். நீராகாரங்களே அவருக்கு வழங்கப்படுகின்றது.

பார்வதி அம்மாள் இந்தியாவில் தங்கி சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்தகின்றது என மேல் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இதனால் இவ்வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு விசாரணையின் பின்னரே பார்வதி அம்மாள் இந்தியா செல்வது குறித்துத் தீர்மானிக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.