பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவிற்கு பூரண ஆதரவளிக்கப்படும் ‐ அமெரிக்கா

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிபுணாகள் குழுவின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
 
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் டொன்னர் தெரிவித்துள்ளார்.

மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவளிக்கும் அதேவேளை, குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டியது அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நிபுணர்கள் குழு நியமனத்திற்கு எதிராக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் பாரிய போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
 
போராட்டங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அமெரிக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.