பிரிட்டன், இந்தியா, அமெரிக்கா நாடுகளுக்கு அடிபணிவது தமது கழுத்தை தாமே வெட்டிக் கொள்வதற்கு சமமானது – எல்லாவெல

ellawala_medhananda_therar001வன்னி மக்களை மீட்பதற்கென இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இதனை ஆதரித்து அடிபணிவது தமது கழுத்தை தாமே வெட்டிக் கொள்வதற்கு சமமானது என பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சுயாதீனமான இறையாண்மை கொண்ட நாடு. இந்த நாட்டுப் பிரச்சினையில் தலையிடும் உரிமை எவருக்குமில்லை. எனவே இந்த நாடுகளுக்கு அடிபணிந்து யுத்தத்தை நிறுத்துவது தமது கழுத்தை தாமே வெட்டுவது போன்றதாகிவிடும் என ஜாதிக ஹெல உறுமயக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் யுத்தம் நிறுத்தப்பட்டு பேச்சிக்கு இடமில்லை என்பதனை அரசாங்கம் உத்தியோகபூர்வதாக அறிவிக்க வேண்டும்

புhகிஸ்தானில் கிரீகெட் அணியினர் மீது தாக்குதல், மாத்தறை குண்டு வெடிப்பு போன்றவற்றில் ஈடுபடும் விடுதலை புலிகளின் தலைவரை பாதுகாப்பதற்கு இந்த நாடுகள் முயற்சித்துவருவதாக தேரர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.