யுத்தக் குற்றவாளி மேஜர் ஜகத் டயஸ் ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டதனை எதிர்த்து மக்கள் பேரவை கையெழுத்துப் போராட்டம்!

இலங்கையில் தமிழ் மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு யுத்தத்தின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை தமது நாட்டுக்கான ஜெர்மனியத் தூதுவராக இலங்கை அரசு நியமித்துள்ளது. போர்க் குற்றவாளியான மேஜர் ஜெனரல் ஜகத் டயசின் நியமனத்தை ஜெர்மனிய அரசும் அங்கீகரித்துள்ளது. இதனை எதிர்த்து, புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் ஜெர்மனிய அரசுக்குத் தமது கண்டனங்களைப் அனுப்பி வருகின்றனர்.

பிரான்சில், இந்த நடவடிக்கையினை மக்கள் பேரவையினர் முன்னெடுத்து வருகின்றனர். 04 ஜுலை 2010 அன்று பாரிஸ் புறநகர் ‘லு புஷே’யில் நடைபெற்ற தமிழர் விளையாட்டுப் போட்டி மைதானத்திலும் மக்களிடம் கண்டன அட்டையில் கையொப்பம் வாங்கும் முயற்சியில் மக்கள் பேரவையினர் ஈடுபட்டிருந்தனர். ஏராளமான தமிழர்கள் மக்கள் பேரவையினரினரால் விளையாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த அலுவலகத்திற்குச் சென்று, தமது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இதே வோளை, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸைத் தமது நாட்டுக்கான இராஜதந்திரிகளில் ஒருவராக ஜெர்மனிய அரசு அங்கிகரித்துள்ளமைக்கு ஜரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும், அயலார்ந்து நாட்டு சோசலிச கட்சி உறுப்பினருமான ஜோ ஹிக்கின்ஸ் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இந்த அங்கீகரத்தையும், அனுமதியையும் இரத்துச் செய்ய வலியுறுத்தி ஹிக்கின்ஸ் ஜேர்மனிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும், அயர்லாந்துக்கான ஜேர்மனிய தூதுவருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

அவர் இக்கடிதங்களில் குறிப்பிட்டுள்ளவை வருமாறு

இலங்கையில் இடம் பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் முக்கிய படைத் தளபதிகளில் ஒருவராக பணியாற்றியவர் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் இதில் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொள்ளப்பட்டிருக்கிறார்கள். ஜனநாயக உரிமைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன. முன்னணி ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஜேர்மனிக்கான பிரதித் தூதுவராக ஜகத் டயஸை ஏற்றுக் கொண்டுள்ளமை பேரதிர்ச்சியைத் தருகின்றது. ஜேர்மனியில் இருந்து வந்த ஈழத் தமிழ்கள் 06 பேரை ஜேர்மனிய அரசின் ஆதரவுடன் கைது செய்தார் என்கிற தொனியில் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் ஊடகங்களுக்கு பேட்டி வழங்கியிருக்கிறார். இதுவும் பேரதிர்ச்சியைத் தருகின்ற விடையமே.

இலங்கையின் இரானுவ உயரதிகாரிகளை இராஜதந்திரிகளாக ஏற்றுக் கொள்ளப் போவதில்iலை என்று ஜேர்மனிய அரசும் இந்த அரசின் முக்கியஸ்தர்களும் முன்பு பகிரங்கமாக தெரிவித்தார்கள். ஆனால் யுத்தக் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றில் இலங்கை அரசும் அதன் அரச படைகளும் ஈடுபட்டுயிருக்கின்றனர். என்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்ற நிலையில் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்ற்கு இராஜதந்திரி அந்தஸ்தை ஜேர்மனிய அரசு வழங்க தீர்மானித்துள்ளமையை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.